நூலாசிரியரைப்பற்றி

            ??????????????????????

கௌசி அவர்கள் இந்துசமுத்திரத்தின் முத்து இலங்கையென்னும் எழில் மிஞ்சியநாட்டில் பிறந்தவர். இதில் கலைவளமும் கவிவளமும் விஞ்சிய மட்டுநகரின் கண் மாண்புடன் திகழும் ஏர் ஊராம் ஏறாவூரில் சமுதாயப் பற்றாளர், சமூகசேவையாளர் திரு. கி. வேலுப்பிள்ளைக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் பிறந்த மகளே ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் சந்திரகௌரி. இவர் எழுத்துலகில் வலம்வரும் பெயர் கௌசி. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது தமிழ்சிறப்புக் கலைமாமணி பட்டப்படிபை முடித்தார். நாவல நுகேகொட என்னும் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா முடித்து 9 வருடங்கள் ஆசிரியராகவும் ஆசிரியர் ஆலோசகராகவும் மட்டக்களப்பிலும் ஹம்பகா மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார். புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வரும் இவர் தனது சொந்த இணையத்தளத்தின் மூலமும் (www.gowsy.com) இலங்கைப் பத்திரிகையிலும் இலண்டன்தமிழ் வானொலியிலும் சஞ்சிகைகளிலும் பிற இணையத்தளங்களிலும் தனது எண்ணங்களைப் பதியவிட்டிருக்கின்றார். இலண்டன்தமிழ் வானொலியில் ஓடிவிளையாடுபாப்பா என்னும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

                இவர் ஆக்கங்கள் சமுதாயத்தின் கண்ணாடி. சமூகக் குப்பைகள் களைந்தெறிய வேண்டும் என்பதைத் தன் கவிதை, கட்டுரை, கதை, தனது வாசகம், போன்ற படைப்புக்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். எதையும் எழுதலாம் என்பதை விடுத்து இதைத்தான் எழுதவேண்டும் என்ற கொள்கையுள்ளவர். எழுத்துக்களின் மூலம் வாசகர்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு படைப்பாளி. இவரது பகுத்தறிவுக் கொள்கை இவரது கட்டுரைகள் மூலம் புலப்படுகின்றது. சொல்லவருகின்ற விடயம் வித்தியாசமான பார்வையில் இருக்கவேண்டும் என்பதில் அலாதிப் பிரியமுள்ளவர். எதனையும் சிந்தித்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பண்புள்ளவர். எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆளுகின்ற வல்லமை படைத்தவன். இந்த ஆளுமை கௌசியிடம் நிறையவே இருக்கின்றது.

திருமதி. ப. இளங்கோ M.ED

பிரதிக் கல்விப் பணிப்பாளர்

கல்குடா வலயக் கல்வி அலுவலகம்

வாழைச்சேனை

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *